ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும் தேமொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிட வாருங்களே!
Tamil Christian Worship


நீடிய பொறுமை

Live Worship

New Worship Songs Updates - 2026


வானும் புவியும் வையகமும்

வானும் புவியும் வையகமும்
வனைந்த வல்ல பரனான
வானக தந்தையே நம்புகிறேன்

அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவுமாய்
அவதரித்ததையும் நம்புகிறேன்

பிலாத்துவின் கீழவர் சிலுவையத்தில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன்

உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயரே எழுந்து பரன் வலமே
உடனிருப்பதையும் நம்புகிறேன்

உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறேன்

தூயாவி தூயோர் சபை உறவு
பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய் நிலை வாழ்வையும் நம்புகிறேன்



நிசேயா விசுவாசப் பிரமாணம்

விசுவாசப் பிரமாணம்