40 தியான பாடல்கள் - Day 2
1. ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி (2) - அல்லேலூயா
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
2. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும் (2) - அல்லேலூயா
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
3. பெத்தலேகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ (2) - அல்லேலூயா
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
4. நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார் (2) - அல்லேலூயா
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
தியான வசனம்:
சங்கீதம் 103: 1,2
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
Psalm 103: 1,2 ( ESV )
Bless the Lord, O my soul, and all that is within me, bless his holy name!
Bless the Lord, O my soul, and forget not all his benefits.
Psalm 103 is one of the Bible’s most uplifting psalms. David begins by commanding his own soul to “Bless the Lord”, reminding himself not to forget God’s many benefits.
He lists God’s gifts: forgiveness, healing, redemption and then expands to describe
God’s character: merciful, gracious, and abounding in steadfast love.
|