40 தியான பாடல்கள் - Day 5
1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாம் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே
2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எமைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
3. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
கடலையுங் காற்றையும் அமர்த்தியெமைக்
காப்பாரே அல்லேலூயா
4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம்
தியான வசனம்:
சங்கீதம் 47: 1
சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
Psalm 47: 1 ( RSV )
Clap your hands, all peoples! Shout to God with loud songs of Joy!
Psalm 47 is a jubilant song of worship celebrating God’s sovereignty over all nations and His special favor toward Israel.
It was written by the Sons of Korah and this psalm portrays God as a universal King, not limited to Israel, whose dominion extends over every nation and people.
The imagery of clapping hands, shouting, and musical instruments reflects a communal celebration.
|