ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்


Lyrics: Ceylon Pentecostal Mission ; Music: M.S.Viswanathan

40 தியான பாடல்கள் - Day 4

1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவ ரென்னாத்து மாவிற்கே
ஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே

2. தந்தை தாய்முன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனேன் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

4. ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம்



தியான வசனம்:

சங்கீதம் 32: 11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

Psalm 32: 11 ( NKJV )
Be glad in the Lord and rejoice, you righteous; And shout for joy, all you upright in heart!

Psalm 32 was written by King David. In this psalm, David reflects on the heavy emotional and physical toll of unconfessed sin, the profound relief of God's forgiveness, and the joy of a restored relationship with God. Many scholars believe it was written after his repentance concerning Bathsheba and his confrontation by the prophet Nathan, serving as a reflection of the Joy he found after receiving forgiveness